கட்டலோனியாவின் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஸ்பெய்னில் தேசிய தினம் அனுஷ்டிப்பு


59def84fccc45-IBCTAMIL

அரசியல் ரீதியிலான பலத்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்பெயின் தனது தேசிய தினத்தை இன்றைய தினம் கொண்டாடுகிறது.

ஸ்பெய்னிலிருந்து கட்டலோனியா பிரிந்து சுதந்திர பிரகடனத்தை செய்துள்ள நிலையில் ஸ்பெய்ன் தனது தேசிய தின கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளது.

ஸ்பெய்னிலிருந்து பிரிந்து தனிநாடு உருவாக்குவதற்கான கோரிக்கையை கட்டலோனியா விடுத்திருந்தது.

அத்துடன் கடந்த 1 ஆம் திகதி தனிநாடு தொடர்பான வாக்கெடுப்பை நடத்தியிருந்தது.

இந்த வாக்கெடுப்பில் 90 சதவீதமானவர்கள் தனிநாடு தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவளித்திருந்தார்கள்.

இதேவேளை, இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என தெரிவித்த ஸ்பெய்ன் அரசாங்கம், குறித்த வாக்கெடுப்பின் முடிவுகளை நிராகரிப்பதாக அறிவித்திருந்தது.

எனினும் தற்போது, கட்டலோனியாவின் சுதந்திரம் தொடர்பான பிரகடனத்தை எதிர்வரும் 5 நாட்களுக்குள் தீர்மானிக்குமாறு கட்டலோனிய தலைவருக்கு ஸ்பெய்ன் அரசாங்கம் அவகாசம் வழங்கியுள்ளது.(ச)

59def84fccc45-IBCTAMIL

59def84fa5b2b-IBCTAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>