இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல் புதுடில்லியில்


Indian-Fishing-Boats

இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் இலங்கையின் மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இந்தியாவின் விவசாய மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்திய மீன்பிடி படகுகள் இந்நாட்டுக்குள் வருவது தொடர்பில் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று இரவு இந்திய பயணமாகவுள்ளார்.

இதேவேளை, அமைச்சர்களின் கலந்துரையாடலுக்கு முன்பாக அமைச்சரவை அதிகாரிகளின் கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (அ|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>