இலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து


sltb

இலங்கை போக்குவரத்து சபையில் பணி புரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள சிரமங்களை கருத்தில்கொண்டு பொது போக்குவரத்து சேவையை உரிய முறையில் முன்னெடுக்கும் பொருட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளை கொண்டு விசேட சேவைகளை நடத்தவும் போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>