ஹம்பாந்தோட்டையில் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ASP இடமாற்றம்


police attack youth in hambantota

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தங்காலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துஷார தழுவத்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாத்தறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மத்தளை விமான நிலையத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சியின் ஏற்பாட்டில் ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன்போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. (அ|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>