உலகின் முதலாவது ஆளில்லா பொலிஸ் நிலையம் டுபாயில் அறிமுகம் ( Video)


maxresdefault (1)

முற்றிலும் இணைய வழியில் இயங்­கக்­கூ­டிய உலகின் முதலாவது பொலிஸ் நிலையம் டுபாயில் நிறுவப்பட்டுள்ளது.

‘எஸ்.பி.எஸ்.’ (ஸ்மார்ட் பொலிஸ் ஸ்டேஷன்) எனப் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ள இப்பொலிஸ் நிலையத்தின் மூலம் புகார் அளித்தல், போக்­கு­வ­ரத்து அப­ராதம் செலுத்­துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவை­யான ஆவ­ணங்கள் பெறுதல் உள்­ளிட்ட 60 சேவை­களை பெற்றுக்கொள்ள முடியும் என தெறிக்கப்படுகின்றன.

மேலும் இவ் ஸ்மார்ட் பொலிஸ் நிலையத்துக்கு வரும் பொது மக்களின் உதவிக்காக 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவைக்கு அமர்த்தப்படும் எனவும்இச் சேவைகள் பொது மக்கள் அறிந்து கொண்டதன் பின் அவ்விரு பொலிஸாரும் மீளப்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலை­யத்தின் முகப்பு அறையில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் இயந்­தி­ரத்தில், தாங்கள் எந்த சேவையை பெற வந்­தி­ருக்­கி­றார்­களோ அதற்­கான டோக்­கனை பெற்­றுக்­கொள்­ளலாம் எனவும் பின்னர் காத்­தி­ருப்பு அறையில் இருந்து காணொ­ளிக்­காட்சி மூலம் பொலிஸ் அதிகாரியைத் தொடர்பு கொண்டு தங்களுக்கான சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

maxresdefault (1)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>