ஒரே சமயத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் வசதிகளுடன் Nokia 8


maxresdefault (1)

வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நோக்கியா 8 ஸ்மார்டபோனை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சம்சுங் கலக்ஸி S8, வன்பிளஸ் 5 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நொக்கியா 8 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கைபேசி அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இக் கைபேசியில் 13 மெகாபிக்சல் கொண்ட டூவல் கமரா உள்ளது, இதனால் பிரைமரி மற்றும் செல்பி கமரா மூலம் சமூக வலைத்தளங்களில் நேரலை வீடியோக்களை ஒரே சமயத்தில் பதிவு செய்யலாம்.

5.3 இன்ச் IPS QHD டிஸ்ப்ளே, 2560 x 1440 கார்னிங் கொரில்லா கிளாஸ், அன்ட்ரொய்ட் 7.1.1 நௌகட், குவால்கம் ஸ்னாப்டிராகன் 835 போரசஸர் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ், 256 ஜிபி வரை நீட்டிக்கப்படும் வசதி, டூயல் சிம் சப்போர்ட், 3090mAh பட்டரி திறன், வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை இது கொண்டுள்ளது.

இந்த போன், பொலிஷ்டு ப்ளூ, டெம்ப்பர்ட் ப்ளூ, ஸ்டீல், பொலிஷ்டு கொப்பர் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், ஒரே சமயத்தில் முன்பக்க கமரா மற்றும் பிரைமரி கமராக்களை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>