செம்மஞ்சளாகிய வட பிரான்சின் வானம் (Photos)


59e4b6e9b0c8a-IBCTAMIL

வட பிரான்சின் Bretagne (Vannes, Brest, Saint-Brieuc, Lorient, Saint-Malo, Granville, Nantes , Saint-Nazaire)பகுதி நேற்று காலை முதல் செம்மஞ்சள் நிறமாக மாறியுள்ளமை பலருக்கு ஆச்சரியத்தினையும் கேள்வியினையையும் எழுப்பியுள்ளது.

காலை தொடக்கம் செம்மஞ்சளாக மாறித் தொடங்கிய வானத்தின் நிறத்தினால் அப்பகுதி மக்கள் தமது அச்சத்தினை சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரிவித்து வருவதோடு, பகலே இரவாக மாறியுள்ளதாக கூறியுள்ளனர்.

சுற்றாடல் முழுவதும் மாசுபட்ட ஒரு துகில்கள் நிறைந்து காணப்படுவதாக பிரென்சு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அர்லாண்டிக் பெருங்கடலில் குடி கொண்டுள்ள Ophelia சூறாவளி, இப்பிராந்தியத்தினையும் அண்டிக் கடக்க உள்ள நிலையில், செம்மஞ்சளாக வானம் தோன்றியுள்ளமை அதன் ஆபத்தினை முன்னுணர்த்துகின்றதா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

போர்த்துக்கல் மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காற்றில் இழுபட்டு இப்பகுதியினை செம்மஞ்சள் ஆக்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சஹாரா பாலைவனப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாலைவனப்புயல் காரணமாகவே இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்துக்களும் கூறப்படுகின்றது.

பிரான்சின் தேசிய வானிலை அவதானிப்பு நிலையம் இதற்கான காரணம் தொடர்பில் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.(ச)

59e4b6e9eec73-IBCTAMIL

59e4b6ea15ff0-IBCTAMIL

59e4b6e9d40c7-IBCTAMIL

59e4b6e9b0c8a-IBCTAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>