இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர்


download

இலங்கை கிரிக்கெட் அணிக்கான புதிய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பொறுப்பில் இவர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றுவதாக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

திலன் துசார சமரவீர (பிறப்பு: 22 செப்டம்பர் 1976, கொழும்பு) அல்லது சுருக்கமாக திலன் சமரவீர என அழைக்கப்படும் இவர், இலங்கை  அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 1998 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இந்திய அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் தேசிய அணியில் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

திலான் சமரவீர இதற்கு முன்னர் பங்களாதேஷ் அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. (மு)

 

2 comments

  1. எல்லோரும் முடிந்து இப்ப இவரா
    கெடக்குத மானமும் போகட்டும்

  2. Yaan thotrathu pothatha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>