இந்திய தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி விபரம்


d4fd6d16b38c5899621244e7234cedcb

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்கான இலங்கை அணி வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அணியில் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டீ சில்வா மற்றும் பந்து வீச்சாளர் தசுன் ஷானக ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் சோபிக்க தவறிய குஸல் மெண்டிஸ், கௌஷல் சில்வா ஆகியோர் குறித்த அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காயம் காரணமாக ஓய்விலிருந்த முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை டெஸ்ட் அணி விபரம்

தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, தனஞ்சய டீ சில்வா, அஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷன் திக்வெல்ல, லஹிரு திரிமான்ன, ரோஷன் சில்வா, தசுன் ஷானக, டில்ருவன் பெரேரா, ரங்கன ஹேரத், லக்ஷன் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு கமகே, விஷ்வ பெர்னாண்டோ. (அ|ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>