போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த வைத்தியரின் மகன் கைது


DrugArrestsHeader

ஓட்டமாவடியில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்து போதை மாத்திரை வியாபாரியை வாழைச்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வாழைச்சேனை குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ஓட்டமாவடி பிரதேசத்தில் மிக நீண்ட நாட்களாக போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வைத்தியர் ஒருவரின் மகனிடம் இருந்து 120 போதை மாத்திரைகள் மற்றும் எட்டு கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறான சட்டவிரோத சம்பவங்களை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுவினர் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் தெரிவித்தார்.

குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>