நீரிழிவு நோயை கட்டுப்படுத்த தேசிய நிகழ்ச்சித்திட்டம் அவசியம் – ஜனாதிபதி


maithripala sirisena

இன்று உலகில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாத நோய்களில் முக்கிய நோயான நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்று அவசியம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நேற்று (12) முற்பகல் கொழும்பு காலி முகத்திடலில்
ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த தேசிய நீரிழிவு தின நடைபவனி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நீரிழிவு நோய் தொடர்பாக மக்களை அறிவூட்டும் நோக்குடன் நீரிழிவு நோய் மாதமொன்றை
பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார மருத்துவ அலுவலகங்களின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் அம்மாதத்தில் நாடளாவிய தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்வேறு நிறுவனங்களினால் சந்தைக்கு வரும் பால் பக்கட்டுகளில் உள்ளடங்கியுள்ள சீனியின் அளவை காட்சிப்படுத்துவதற்கும் கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட மென்பானங்களுக்கான வரியை நடைமுறைப்படுத்துவதற்கான தேவையையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பான இத்தகைய உற்பத்திகள் தொடர்பான தீர்மானங்கள் குறித்து எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பணியகம், இலங்கை நீரிழிவு பேரவை ஆகியன இணைந்து இந்த நடைபவனி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. நடைபவனியில் காலிமுகத்திடலுக்கு வந்த ஜனாதிபதி அங்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கண்காட்சியை திறந்துவைத்ததுடன் அதைப் பார்வையிட்டார்.

தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட “ஆரோக்யா” சஞ்சிகை வைத்தியர் நொயெல் சோமசுந்தரம் அவர்களினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, நீரிழிவு பேரவையின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசாத் கட்டுலந்த மற்றும் வைத்தியர் மனில்க சுமனதிலக உள்ளிட்ட வைத்தியர்கள் அரசாங்க அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (நு)

One comment

  1. எப்படித்தான்..நிங்கள்.படம்
    காட்டினாலும்..ஒன்றும்
    நடக்காது..இப்போதைக்கி
    நிங்கள்.ஒரு.போம்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>