47 வருட வரலாற்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி கௌரவிப்பு


23472717_859565057536155_1463925624431209842_n

வவுனியா, ஆனைவிழுந்தான் முஸ்லிம் வித்தியாலயத்தின் 47 வருட வரலாற்றில் முதன் முதலாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 159 புள்ளிகளை பெற்று சித்தியடைந்த அஸ்வர் பாத்திமா ஸல்ஹா என்ற மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

பாடசாலை அதிபர் கே எம் எம் அனீஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர்களான வி ஜயதிலக, அலிகான் ஷரீப், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சகாயநாதன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் யேசுதாஸ், அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முகம்மது, அப்துல் பாரி மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.(ச)

23472991_859565220869472_7246989800244568663_n

23434902_859565140869480_7749179165057348868_n

23472717_859565057536155_1463925624431209842_n

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>