“புதியதோர் அரசியலமைப்புக்கு பயமா?” – திறந்த கலந்துரையாடல்


23550067_1542004875835643_4902046393021347652_o

புதிய அரசியலமைப்பு விடயத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கிடையேயான திறந்த கலந்துரையாடலொன்று நாளை (15) பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு மகவலி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, டிலான் பெரேரா, விஜித ஹேரத், கரு பரணவிதான, கொம்யுனிஸ்ட் கட்சியின் செயலாளர் டீவ் குணசேகர, கலாநிதி ஜயதேவ உயங்கொட ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

“புதியதோர் அரசியலமைப்புக்கு பயமா?” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த கலந்துரையாடலில் பொதுமக்கள், சிவில் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் என அனைவரும் கலந்துகொள்ளமுடியுமென்று இலங்கை இளம் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>