பியர் குறித்த யோசனையை மாற்றுவதில்தான் அரசாங்கத்தின் ஆயுள் தங்கியுள்ளது- ஓமல்பே தேரர்


Omalpe-Sobitha

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பியர் வரி குறைப்பு தொடர்பான யோசனைகளை அரசாங்கம் மாற்றம் செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யவில்லையாயின் அரசாங்கத்தின் ஆயுள் காலத்துக்கு அதுவே சவாலாக அமையும் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

நிதி அமைச்சரின் பியர் விலை குறைப்பு தொடர்பான யோசனை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

வரவு செலவுத் திட்டத்தில் புதிதாக யோசனைகளை முன்வைக்கும் போது பல தரப்பினரையும் வினவ வேண்டும். நிதி அமைச்சர் மங்கள சமரவீரவோ, பியர் கம்பனியுடன் மாத்திரமே கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளார் எனவும் தேரர் குற்றம்சாட்டினார்.  (மு)

One comment

  1. மதுபானம்.அனைத்துக்கும்விலையைகூட்டவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>