மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வரின் ஞாபகார்த்த நிகழ்வு


ahm azwer

மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வு ஒன்று இம்மாதம் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 க்கு கொழும்பு 07 இல் அமைந்திருக்கும் இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு என்பன கூட்டாக இணைந்து இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ளன.

சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கெளரவ அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

இந் நிகழ்வில் இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவரும் முன்னாள் லோக்சபா உறுப்பினருமான முனீருல் மில்லத் – பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துவார்.

சிறப்பு அதிதிகளாக அமைச்சர்களான ரவூஃப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், கபீர் ஹாஷீம், எம்.எச்.ஏ.ஹலீம், ஃபைசர் முஸ்தபா, மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பெளஸி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எதிர்க் கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பேராசிரியர் திஸ்ஸ விதாரண முன்னாள் லோக்சபா உறுப்பினரும் இந்திய முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவருமான அல் ஹாஜ் எம். அப்துல் ரகுமான் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

அன்றைய தினம் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அஸ்வர் அவர்களின் வாழ்க்கைச் சரிதம் குறித்து ஆங்கில, தமிழ் மொழிகளில் இரண்டு நூல்களும் வெளியிடப்பட உள்ளன. (நு)

ahm azwer

2 comments

  1. எப்ப மவுத்தான எனக்குத் தெரியாதே

  2. Muslim enemy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>