“பங்குச் சந்தையும் 2018 ஆம் ஆண்டு பாதீடும்” – செயலமர்வு


CSE Budget 2018

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் (Colombo Stock Exchange) ஏற்பாட்டில் “பங்குச் சந்தையும் 2018 ஆம் ஆண்டு பாதீடும்” எனும் தொனிப்பொருளில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் எவ்வாறு அறிவுபூர்வமான தீர்மானங்களை எடுப்பது தொடர்பிலும் சமகால சந்தை நிலவரம் தொடர்பாகவும் விளக்கமளிக்கும் செயலமர்வொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் சந்தை அபிவிருத்தி பிரிவின் சிரேஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர் ஆர்.எம். சிவானந்தன் தெரிவித்தார்.

பங்குச் சந்தை முதலீட்டாளர்களையும் அதனுடன் தொடர்புபட்டவர்களையும் இலக்காக கொண்டு நடைபெறவுள்ள இச்செயலமர்வு இம்மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 3.00 மணி முதல் 6.00 மணி வரை கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மூலம் நடைபெறவிருக்கும் இச்செயலமர்வு தமிழ் மொழி பேசும் முதலீட்டாளர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பமாக அமையும் என்பதுடன் இதன்போது பங்கு பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் உட்பட தரவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும்

ஆர்வமுள்ள பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இச்செயலமர்வு தொடர்பான மேலதிக தகவல்களையும், முன் பதிவுகளையும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் சந்தை அபிவிருத்தி பிரிவுடன் 011-2356517 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் முன்பதிவுகள் மேற்கொண்டவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். (நு)

-ராபி சிஹாப்தீன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>