“அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா (VIDEO)


Ameen Nm ameen book launch

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன் பற்றி, கவிஞர் மூதூர் எம்.எம்.ஏ. அனஸ் எழுதிய “அமீன் அருங்காவியம்” கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த 18ம் திகதி கொழும்பு புதிய நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அஸீஸ் மன்றம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியுடன் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் இந்திய லோக் சபையின் முன்னாள் உறுப்பினருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின், மாநில சிரேஷ்ட உப தலைவர் எம். அப்துல் ரஹ்மான், அஸீஸ் மன்றத் தலைவர் அஷ்ரப் அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காவியாபிமானி கலைவாதி கலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக்கொண்டதோடு நூல் ஆய்வினை காப்பியக்கோ டாக்டர். ஜின்னா ஷரீப்தீன் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. (நு)

One comment

  1. அட வெங்காயங்களா இந்த காதர் மொஹிடீன் கருணாநிதிக்கு வாக்கு போடுவது ஆறாவது கடமை என்று சொன்ன கபோதி இவனை போய் பிரதம விருந்தினர் இந்திய முஸ்லிம்களால் ஓரங்கட்டப்படவன் அல்லாஹ் ஒருவனை கேவலப்படுத்த நாடினால் கேவலம் கெட்டவன் தான் வருவான்.. ஞானசார வை அழைத்து அவர் கையால் கொடுத்து இருக்கலாம் ..ரகசிய பேச்சுவார்த்தைக்கு மத நல்லிணக்கத்துக்கு உதவியாக இருந்திருக்கும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>