அழகுக்கலை நிபுணர்களுக்கு ஜனாதிபதி விருது (Photos)


ef458f0204df5ca2b86b8af3f005230b_XL

அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரத் துறையைச் சேர்ந்தவர்களை பாராட்டி விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (20) மாலை பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரத்துறையில் உள்ளவர்களை கௌரவிக்கும் முதலாவது நிகழ்வு இதுவாகும் என்பதுடன், இத்துறையின் முன்னேற்றத்திற்காக இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார கலைஞர்கள் 16 பேருக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்.

அமைச்சர்களான சந்திம வீரக்கொடி, தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே, கருணாரத்ன பரணவித்தான ஆகியோர் உள்ளிட்ட அதிதிகளும் 350க்கும் மேற்பட்ட அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார நிபுணர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (ச)

01 02 03 04 05 06

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>