இந்தோனேசியாவில் எரிமலை வெடிக்கும் அபாயம் ; 10 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்களை வெளியேற உத்தரவு


000f03ec-800

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலை புகையை வெளியிடத் தொடங்கியிருப்பதால், 10 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியா தீவுகளை உள்ளடக்கி அமைந்திருக்கும் நாடு, அங்குப் பல தீவுகளில் எரிமலைகள் உள்ளன. அதில் பாலித் தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 22ஆம் திகதி முதல் புகையை வெளியிடத் தொடங்கியுள்ளது. அதில் இருந்து கரும்புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த எரிமலை வெடித்துச் சிதறும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதன் அருகே தங்கியிருக்கும் கிராம மக்களுக்கு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பங்கள் மற்றும் கால்நடைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் அருகில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டு, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

எரிமலை வெடிக்கும் சத்தம், மலைச்சிகரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவு வரை கேட்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>