இலங்கை அணி தலைவராக திஸர பெரேரா


Thisara perera

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டித்தொடரின் இலங்கை அணிக்கான தலைவராக சகல துறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் ஒருநாள் அணித்தலைவராக செயற்பட்ட உபுல் தரங்கவின் கீழ் இலங்கை அணி சந்தித்து வந்த தொடர் தோல்வியின் காரணமாக அவர் பதவி விலக்கப்பட்டு புதிய தலைவராக திஸரபெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிம்பாபே அணியுடனான ஒருநாள் தொடரை இலங்கை அணி இழந்ததை தொடர்ந்து அணித்தலைவராக செயற்பட்ட அஞ்சலோ மெத்தியூஸ் பதவி விலகியதை அடுத்து இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு அணித்தலைவராக உபுல் தரங்க மற்றும் டெஸ்ட் அணித்தலைவராக தினேஷ் சந்திமால் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

எனினும் தொடர்ந்து வந்த தென் ஆபிரிக்கா, இந்திய, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கெதிரான தொடரில் இலங்கை 5-0 என்ற அடிப்படையில் படு தோல்வியை சந்தித்திருந்தது.

இதன்படி இலங்கை அணியின் தொடர் தோல்விகளை தவிர்ப்பதற்காக தற்போது சிறப்பாக விளையாடிவரும் சகலதுறை வீரர் திஸர பெரேரா தெரிவுக்குழு மூலம் அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய அணிக்கெதிரான டீ டுவென்டி தொடருக்கும் அணித்தலைவராக திஸர பெரேரா செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது. (அ|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>