பொஸ்னியாவின் முன்னாள் இராணுவத் தளபதி நீதிமன்றில் தற்கொலை (Video)


praljak_sequence.jpg.size-custom-crop.0x650

பொஸ்னியா இராணுவத்தின் முன்னாள் தளபதியான ஸ்லோபோதன் ப்ரால்ஜக், சர்வதேச நீதிமன்றில் நீதிபதி கண் முன்னே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 1992 – 1995 ஆண்டுகளில் நடந்த பொஸ்னியா போரின் போது குறிப்பிட்ட இனத்தவர்கள் போர் நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம் போஸ்னிய இராணுவத்தின் தளபதியாக செயல்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட 6 பேரை போர் குற்றவாளிகள் என அறிவித்தது.

இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று நீதிமன்றில் ஆஜரான ஸ்லோபோதன் ப்ரால்ஜக் நீதிபதி கண்முன்னே குப்பியில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு, நான் குற்றமற்றவன் என்றும் தான் விஷம் குடித்துள்ளதாக நீதிபதியிடம் கூறினார்.

இதனையடுத்து, மருத்துவர்களை வரச்சொல்லிவிட்டு நீதிமன்றம் ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். (ஸ)

3 comments

  1. குறிப்பிட்ட இனம் கொஸோவோ முஸ்லிம்கள்தானே இதற்கு ஆதாரமாக பிஹைன்ட் எனிமி லைன் என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியும் இனைக்கப்பட்டுள்ளது.

  2. இந்த இன வெரி பிடிச்ச நாசக்காரன் இப்படி இல்லை இதையும் விட கேவலமாக சாகவேன்டும்.

  3. Because he is the one killl the muslims from 100.000 to 300.000 muslims this stupid

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>