மீன்முள்ளு தொண்டையில் சிக்கியதால் எட்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு


embeddedIMG_FishBoneInThroat_850px_1-600x600

திரளிமீனும் புட்டும் உண்ட போது அதன் முள்ளு தொண்டையில் சிக்கிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (29) இடம்பெற்றுள்ளது

5வீட்டு திட்டம் நாவற்குழி பகுதியினை சேர்ந்த 8 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 19 ம் திகதி இரவு மேற்படி பெண் இரவு உணவிற்காக திரளிமீன் கறியுடன் புட்டு உண்டுள்ளார். இதன் போது மீனின் முள் தொண்டையில் சிக்கியுள்ளது.

மானிப்பாயில் உள்ள இவரது மகன் அழைத்து சென்று தனது பராமரிப்பில் வைத்திருந்ததுடன், முதலுதவிக்காக சங்காணை பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை சாவகச்சேரி பிரதேசத்திற்கு பொறுப்பான மரண விசாரணை அலுவர் இளங்கீரன் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் பிள்ளைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. (ஸ)

– பாறுக் ஷிஹான் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>