ஏமன் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சுட்டுக் கொலை


01

ஏமன் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ், ஹூதி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்களில் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.

சலேஹ்வின் பொது மக்கள் காங்கிரஸ் கட்சியும் அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்துள்ளது.

கடந்த வாரம் வரை, சலேயின் ஆதரவாளர்கள் ஹூதி இயக்கத்துடன் இணைந்து ஏமனின் தற்போதைய ஜனாதிபதி அப்த்ரபுத் மன்சூர் ஹாதிக்கு எதிராக போராடியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலே கொல்லப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர், சவூதி தலைமையிலான கூட்டணியின் விமான தாக்குதல்கள் ஏமனின் தலைநகரான சனாவில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட அரசியல் பதற்றம் மற்றும் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனாவில் உள்ள மசூதியை டார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது தொடர்பான மோதலில் கடந்த புதன்கிழமை முதல் 125 பேர் கொல்லப்பட்டனர், 238 பேர் காயமடைந்தனர்.

01 02 03 04

Yemen's President Ali Abdullah Saleh addresses a gathering of supporters in a soccer stadium in Sanaa March 10, 2011. REUTERS/Khaled Abdullah

Yemen’s President Ali Abdullah Saleh addresses a gathering of supporters in a soccer stadium in Sanaa March 10, 2011. REUTERS/Khaled Abdullah

2 comments

 1. ஏமன் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சுட்டுக் கொலை??? Ithyuma daa like pannuvinga?

 2. அரபு நாட்டின் ஒவ்வொரு
  வரும் இடது கையில் மர
  ணத்தையும் வலதுகை
  யில் சுபனத்தையும்
  வைத்துக்கொண்டு வாழ்
  ந்தால் வெற்றிதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>