வெவ்வேறு சுற்றிவளைப்புக்களில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது


Screen Shot 2017-12-05 at 11.16.36 AM

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலத்தோப்பூரில் நேற்று மாலை 450 கிராம் கேரளா கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. ஜனோசன் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தோப்பூர் பகுதியை சேர்ந்த 36 வயது குடும்பஸ்தர் ஒருவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் அவரது வீட்டில் வைத்து சோதனைக்குட்படுத்தப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கேரளா கஞ்சாவுடன் மூதூர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மற்றொருவர் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் பழைய வைத்தியசாலை சந்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்னால் 05 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியாவைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சோதனையிட்டபோது தன்வசம் கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டதாகவும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். (நு)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-

Screen Shot 2017-12-05 at 11.16.19 AM

Screen Shot 2017-12-05 at 11.16.28 AM

Screen Shot 2017-12-05 at 11.16.36 AM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>