பயணிகள் படகு எண்ணெய் கப்பலொன்றுடன் மோதியதில் 13 பேர் பலி


boat

தென்கொரியாவின் சியோல் நகரிற்கு மேற்காகவுள்ள இஞ்சியோன் துறைமுக நகர கடல் பிரதேசத்தில் பயணிகள் படகொன்று எண்ணெய் கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதன் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து ஏற்படும் வேளையில் குறித்த படகில் 20 பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள் இருந்ததாகவும் படகின் கப்டன் உள்ளிட்ட இருவர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (அ|நு)

boat3

boat2

boat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>