தகவல் தெரிந்தவர்கள் உதவலாம்


AA

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புக்காகச் சென்ற கீழ்க் காணும் ஆறு பேர் தொடர்பில் தகவல் தெரிந்திருந்ததால் தமக்கு அறியத்தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த ஆறு பேரினதும் பெயர்கள், அவர்கள் வெளிநாட்டு சென்ற திகதி மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம். அவர்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் இல்லை என உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

விசேடமாக சவூதி அரேபியாவில் தொழில் புரிபவர்கள் இவர்கள் தொடர்பில் அறிந்திருப்பின் 011 4379328 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது எழுத்துமூலமோ பணியகத்துக்கு அறியத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. (ஸ)

01. எம்.எம். ஜவாஹிரா ( அரபா நகர், மூதூர் 02) வெளிநாடு சென்ற திகதி 2011-10-13
02. ஆர். மல்லிகா பொடிமெனிக்கே, வெளிநாடு சென்ற திகதி 2008-11-14
03. ஆர்.டி. பிரியந்தி, வெளிநாடு சென்ற திகதி 2012-09-21
04. சமந்தா குமாரி, வெளிநாடு சென்ற திகதி 2003-11-06
05. ஏ. மஹேன்றமணி, ( மூதூர்) வெளிநாடு சென்ற திகதி 2006-02-08
06. நீலமணி தென்னகோன், வெளிநாடு சென்ற திகதி 2005-06-14

01

A01 A02 A03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>