இலங்கை – சீன உறவு தொடர்பான புகைப்படக்கண்காட்சி திருமலையில்


DSC00743

இலங்கை மற்றும் சீனாவுக்குமிடையில் இராஜதந்திர உறவு ரீதியாக 60 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஞாபகார்த்த புகைப்படக்கண்காட்சி இன்று திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லகமவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை – சீன நட்புறவுச்சங்கம் திருகோணமலை மாவட்ட செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் இலங்கை மற்றும் சீனாவுக்குமிடையில் கடந்த 60 வருடகாலத்தின்போது இராஜதந்திர ரீதியாக நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் புகைப்படங்களாக காட்சிப்டுத்தப்பட்டள்ளதுடன் பெருமளவான மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் இதனை பார்வையிடுவதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இக்கண்காட்சியானது இன்று மாலை 4மணிவரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதுடன் நாளை மதியம் 2 மணியுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்புகைப்படக்கண்காட்சி திறப்பு விழா நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக்க, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன், இலங்கை – சீன நட்புறவுச்சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். (நு)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-
DSC00743

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>