சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 பேர் கைது


3 (7)

புத்தளம், குதிரை மலைக்கு கிழக்காக உள்ள கடற்பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 2 டிங்கி இயந்திரங்கள், 5 தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் 283 கிலோ மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் உதவி மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (அ|நு)

 

2 (7) 3 (7) 1 (7)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>