பங்குச் சந்தை முதலீடு மற்றும் பங்கு பரிவர்த்தனை தொடர்பான இலவச செயலமர்வு


CSE

பங்கு சந்தை முதலீடு தொடர்பாக பொதுமக்களின் ஆர்வத்தை அதிகரிக்கவும், அறிவை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டு கொழும்பு பங்கு பரிவத்தனையினால் (Colombo Stock Exchange) பங்குச்சந்தை முதலீட்டில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு பங்குகளில் முதலீடு தொடர்பான இலவச செயலமர்வொன்றினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பங்குச்சந்தை முதலீடு தொடர்பான தமிழ் மொழி மூலமான இவ்விலவச செயலமர்வு இம்மாதம் 16 ஆம் (16.12.2017) திகதி சனிக்கிழமை பி.ப 03.00 மணி தொடக்கம் பி.ப 05.00 மணி வரை உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள பங்குப்பரிவர்த்தனையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்த செயலமர்வானது முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை தகவல்களையும் மற்றும் தரவுகளையும் பெற்றுக்கொள்ள ஓர் சிறந்த சந்தர்ப்பம் என்பதுடன் இதன்போது முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை தொடர்பான விழிப்புணர்வை வழங்குவதற்காக பின்வரும் தலைப்புகளில் நடைபெறவுள்ளது.

1.சேமிப்பும் முதலீடும்,
2.பங்குச்சந்தை அறிமுகம்,
3.மத்திய வைப்புத்திட்ட முறைமைகள்,
4.கணக்கினை ஆரம்பித்தல்,
5.பங்குக் கொள்வனவு மற்றும் விற்பனை நடைமுறை,
6.பிணையங்களின் வகைகள்,
7.பங்கு முதலீட்டு நன்மைகள்,
8.பங்குத்தரகர் தெரிவு,
9.பங்குச்சந்தை பெறுபேற்று புள்ளிவிபரங்கள்.

இலங்கையிலுள்ள ஒரேயொரு பங்குச் சந்தையாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை இயங்குவதால் கம்பனிகளும் முதலீட்டாளர்களும் ஒன்றிணையக்கூடிய ஓர் வெளிப்படையான மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட சூழலை வழங்குவதற்கும் பொறுப்பாயுள்ளது.

கொழும்பு பங்கு பரிவர்த்தனையானது இலங்கையின் சட்டங்களுக்கமைய ஸ்தாபிக்கப்பட்ட உத்தரவாதத்தினால் பொறுப்பு வரையறுக்கப்பட்ட ஓர் கம்பனியாகும். இந்நிறுவனம் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமமளிக்கப்பட்டுள்ளதுடன் இது 15 அங்கத்தவர்களையும் 16 வியாபார அங்கத்தகவர்களையும் உள்ளடக்கிய ஓர் பரஸ்பரமுள்ள சட்ட ரீதியான பரிமாற்றகமாகும்.

ஆர்வமுள்ள பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் இச்செயலமர்வு தொடர்பான மேலதிக தகவல்களையும், முன் பதிவுகளையும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் சந்தை அபிவிருத்திப் பிரிவு சிரேஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர் (முதலீட்டாளர் கல்வி) சு.ஆ. சிவானந்தன் அவர்களை 011-2356517, 075-235 2929 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

-ராபி சிஹாப்தீன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>