அக்குறணை பிரதேச சபை வாசிகசாலையின் பிரதிபா – 2017 கலை விழா


w5YEojp

அக்குறணை பிரதேச சபையின் கீழ் இயங்கும் அளவதுகொடை பொது வாசிகசாலையினால் “பிரதிபா-2017″ எனும் தொனிப்பொருளில் கலை விழாவொன்றினை ஏற்பாடு செய்துள்ளது

இவ் விழா இம்மாதம் எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு அக்குறணை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக வாசிகசாலையின் பொறுப்பதிகாரி யு.எஸ்.எ சமரதுங்க தெரிவித்தார்

விழாவின்போது பல கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளதுடன், வெற்றி பெறுபவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இவ்வைபவத்தில் அக்குறணை பிரதேச சபையின் செயலாளர் ரி.எஸ். ராஜபக்ச, உள்ளூராட்சி மன்ற பிரதி ஆணையாளர், பிரதேச சபை அதிகாரிகள் உற்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். (ஸ)

-ராபி சிஹாப்தீன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>