கலாச்சார திணைக்களத்தின் கலாபூஷணம் விருதுவழங்கும் நிகழ்வு (Photos)


25289278_10211301197065539_5680824136078593154_n

கலாசாரத்திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தும் கலை, இலக்கிய துறைகளில் பங்களிப்பு செய்த கலைஞர்களுக்கு கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழும்பு தாமைரைத் தடாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவர்களில் 169 சிங்கள கலைஞர்களும், 20 தமிழ் கலைஞர்களும் 11 முஸ்லிம் கலைஞர்களும் இடம்பெறுகின்றனர்.

இதேவேளை, முதன்முறையாக 40 கலைஞர்கள் திணைக்களத்தின் நேரடி தெரிவு மூலம் கௌரவிக்கப்பட்டனர். பேராசிரியர்களை உள்ளடக்கிய குழுவொன்று செய்த சிபாரிசின் அடிப்படையில் இந்த 40 பேரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அமைச்சா் எஸ்.பி நாவின்ன, பிதியமைச்சா் பாலித்த தேவப்பெரும, அமைச்சின் செயலாளா் டி. சுவா்னபால, கலாச்ரத் திணைக்களத்தின் பணிப்பாளா் அனுசா கோகுல பெர்ணாந்து, கலைச்செல்வன், புரவலா் ஹாசீம் உமர், ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபா் அரசரத்தினம் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனா்.

இக்கலைஞா்களுள் சிரேஸ்ட ஊடகவியலாளா் என். எம். அமீன் மற்றும் பரீல் உட்பட தமிழ் முஸ்லிம் 30 கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. (நு)

-படங்கள்: அஷ்ரப் ஏ. சமத்-

N.M. Ameen25289278_10211301197065539_5680824136078593154_n25299536_10211301196785532_9163595102658627240_n24991427_10211301197105540_3259392709110400303_n24993439_10211301194105465_5155868650630838890_n
25151924_10211301193905460_6989622916210098928_n
kjyf25157962_10211301199065589_1065916162939514697_n

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>