டிரம்பின் படைக்கு எதிராக பலஸ்தீன் முகவராகுங்கள்- பலஸ்தீன் பார்வை 02


images (1)

“மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைதல்” என்ற சுப செய்தி அல்லாஹ்வின் உதவியிலும் வெற்றியிலும் தங்கியுள்ள விடயமாகும். இதை தெளிவாக அத்தியாயம் அந்நஸ்ர் குறிப்பிடுகிறது. “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதைக் காண்பீர்” (அந்நஸ்ர்)

உலகியல் கண்ணோட்டத்தில் வெற்றியும் தோல்வியும் பௌதிக விதிகளுக்கு அமையவே தீர்மாணிக்கப்படுகின்றன. எண்ணிக்கையில் கூடியவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களை வெற்றி கொள்வார்கள். பலவான்கள் பலவீனர்களை வெற்றி கொள்வார்கள். ஆயுத பலத்தில் கூடியவர்கள் ஆயுத பலத்தில் குறைந்தவர்களை வெற்றி கொள்வார்கள்… இருபக்கமும் சமவலு இருக்கும் போது ஒருதரப்பினர் பலவீனமடையும் வரை போராட்டம் சமநிலையில் தொடரும். அல்லது போராடாமலே இரு தரப்பினரும் சுமுகமாக இருப்பர்.

இன்று ஏகாதிபத்திய நாடுகள் மேற்கூறப்பட்ட சடவாத விதியையே தமது அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அத்திபாரமாகக் கொண்டுள்ளனர். இவ்விதியின் மேல் இவர்களுக்கு இருக்கும் அதீத நம்பிக்கை காரணமாக தம்மைவிட எவரும் பலம் பெறக்கூடாது என்பதற்காக தமக்குப் போட்டியாக வரலாம் என்று நினைக்கின்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் மூலவளங்களையும் மனித வளத்தையும் கலாசாரப் பெருமானங்களையும் அழிப்பதற்காக திட்டமிட்டு செயற்படுகின்றனர். அத்துடன் வெற்றி தோல்விகளை இவ்விதிக்கமையவே மதிப்பீடும் செய்கின்றனர்.

அல்லாஹ்வை ஈமான் கொண்ட முஃமின் இந்த சடவாத விதிக்கு முழுப்பெருமானத்தை வழங்க முடியாது. சடவாதத்தைவிட அவனது வாதம் சற்று வித்தியாசமானது. சடவாதி, பொளதிக விதிகளே பலம் என்று நம்புகிறான். ஆனால்,  விதியை உருவாக்கிய அல்லாஹ் மிகவும் பலமானவன் என்று ஒரு முஃமின் நம்புகிறான்.

இவ்வகையில் முஃமினுக்கு வரும் வெற்றி பௌதிக விதியைத் தாண்டிய வெற்றியாக இருக்கவேண்டும். இதை நிரூபிக்க வேண்டுமாயின் குறைந்த ஆளணிப்பலத்துடன் கூடிய ஆளணிப் பலமுடையோரை வென்று காட்ட வேண்டும். அப்போதுதான் அது அல்லாஹ்வின் உதவியாகக் கருதப்படும்.

வரலாறு நெடுகிலும்; சத்தியத்துக்காகப் போராடியவர்கள் இதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். இதைத்தான் அல்குர்ஆன் பெரும் படையணி கொண்ட தன் எதிரியை சந்திக்கும் போது முஃமின்களின் சிறிய படையணி கூறும் வார்த்தைகளை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

“எத்தனையோ சிறிய படைகள் பெரும் படைகளை அல்லாஹ்வின் உதவியைக் கொண்;டு வென்றுள்ளன” (2:249)

அல்லாஹ்வின் உதவியைக் காணும் போது முஃமின்மின்களின் உறுதியும் உத்தேவகமும் அதிகரிக்கிறது. வெற்றி அவர்களைத் தேடிவருகிறது. அது எதிரிகளின் சிந்தனையைக் கிளர்கிறது. தாம் நம்பிய பௌதிக விதிகளின் பலவீனத்திற்கான காரணத்தைத் தேடுவார்கள். அப்போதுதான் அவரகள் தமக்கு முன்னால் ஈமானின் வாயில் திறக்கப்படுவதை கண்டுகொள்வார்கள். அப்போது “நீர் அல்லாஹ்வின் மார்க்கத்ததில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதைக் கண்டுகொள்வீர்”

முஃமின்கள் சத்தியத்தில் இருக்கும் வரை ஆள்பலமும் ஆயுத பலமும் அசத்தியத்தில் இருக்கும் எதிர்த்தரப்பினருக்கு சமமாக இருக்கவேண்டும் என நினைப்பது அல்குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டலுக்கு முற்றிலும் மாற்றமானதாகும். போராளிகள் உச்ச ஈமானியப் பலம் உடையவர்களாயின் அவர்களில் 20 பேர் 200 பேரை வெற்றிகொள்வார்கள் என்றே அல்லாஹ் விதித்திருந்தான். முஸ்லிம்களின் அணியில் ஈமானில் பலவீனமானவர்களும் இருப்பதனால் அல்லாஹ் 200 பேருக்கு 100 பேர் என்ற விகிதத்தில் யுத்தைக் கடமையாக்கினான். பார்க்க, (8:65-66)

மஸ்ஜிதுல் அக்ஸாவை அல்லாஹ் ஜிஹாதின் சின்னமாகத் தந்துள்ளான் என்று ஏற்கனவே பார்த்தோமல்லவா? ஆம் அந்த சின்னத்தையும் அதனுடன் ஒட்டியுள்ள பெருமதிமிக்க புனித பூமியையும் வெற்றி கொள்ளும் போராட்டம் நிச்சயமாக சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையே நிகழும் போராட்டமேயாகும்.

ஆகவேதான், அல்லாஹ் அசத்தியத்தை வேறோடு பிடிங்கி எறிவதற்காக அசத்தியவான்களை சடரீதியானவற்றின் மூலம் மேலும் மேலும் பலப்படுத்துகிறான். சத்தியவான்களை ஈமானின் மூலம் படுத்துகிறான்.

ஆம், பலஸ்தீன வளாகத்தில் யர்மூக் போன்ற, ஹித்தீன் போன்ற, ஐனுஜாலூத் போன்ற இன்னொரு ஈமானியக் களம் எமக்கு முன்னால் நெறுங்கி வந்து கொண்டிருக்கிறது. மிகப் பெரும் சடவாதப் பலத்தை ஒன்று திரட்டியுள்ள ஸியோனிசப் படை அக்களத்தில் தலை குணியப் போகிறது.

“அந்நாளில் முஃமின்கள் மகிழ்வுறுவார்கள்”. காபிர்கள் திகிலுறுவார்கள். உலகத்தார் வியப்பார்கள். ஈமானின் நறுமணத்தை தாம் இருக்கும் இடங்களிலெல்லாம் நுகர்வார்கள். ஆகவேதான் உறுதியாகச் சொல்கிறேன் அனைத்து முஸ்லிம்களும் குறிப்பாக ஒவ்வொரு தாயிக்களும் பலஸ்தீனத்தின் முகவராக இருக்க வேண்டும் என்று. அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்.  (மு)

– அஷ்ஷெய்க் பஸ்லுர் ரஹ்மான் (நளீமி), B.A., Dip. in Edu., SLTS

3 comments

  1. Masha allah

  2. Masha allah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>