எஞ்சிய உள்ளுராட்சி சபைகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பம்


Local.Government.Election

உள்­ளூ­ராட்­சி­ சபைத் தேர்தலுக்காக எஞ்­சி­யுள்ள 248 உள்­ளூ­ராட்சி சபைகளுக்கான வேட்­பு மனுத்தாக்கல் இன்று (18) ஆரம்­ப­மா­வதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை நண்­ப­க­லுடன் நிறை­வ­டை­ய­வுள்­ளது.

இன்று ஆரம்பமாகிய வேட்பு மனுத்­தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னரேயே தேர்தல் நடை­பெறும் தினம் பற்­றிய உத்­தி­யோ­கபூர்வ அறி­வித்தல் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை  341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில்    93 சபை­க­ளுக்கு வேட்­பு­ம­னுத்­தாக்கல் செய்யும் அறி­வித்தல் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது.  குறித்த சபை­க­ளுக்­கான வேட்­பு­மனுத் தாக்கல் கடந்த 11 ஆம் திகதி ஆரம்­பிக்கப்பட்டு கடந்த 14 ஆம் திகதி நண்­ப­க­லுடன் நிறை­வுக்கு வந்­தமை குறிப்பிடத்தக்கது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>