அமெரிக்காவின் கலிபோர்னியா 2 வாரமாக தீயில் எரிகிறது, தீயணைப்பு முயற்சிகள் தோல்வி


download (3)

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

காட்டுத் தீயின் தாக்கம் தொடர்ந்தும் அதிகரிப்பதால் மான்ட்டிகோ, சாண்டா பார்ப்பாரா, வென்சுராகவுன்டி மலையோர பகுதியை ஒட்டியுள்ள லட்சக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டும்  வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த காட்டுத் தீக்கு “தோமஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் 1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகொப்டர்களும், 8,500 தீயணைப்பு வீரர்களும்  ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1932 ஆம் ஆண்டுக்கு பிறகு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2,65,000 ஏக்கரில் மரங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. சுமார் 700 இற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள், வாகனங்கள் தீக்கறையாகியுள்ளதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

உலக நாடுகளில் மூக்கை நுழைத்துக் கொண்டு குழப்பம் ஏற்படுத்தி வரும் டிரம்புக்கு தனது நாட்டிலுள்ள அப்பாவி மக்களை பாதுகாப்பதற்கு முடியாமல் போயுள்ளமை அவரது வங்குரோத்து நிலையை எடுத்துக் காட்டுவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.  (மு)

download (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>