எந்த வேட்பாளருக்கும் 51 வீதமான வாக்குகளை பெற முடியாது – எஸ்.பீ.திசாநாயக்க


edb573a17581af3290eff07627fcedd0_XL

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எந்த வேட்பாளரும் 51 வீதமான வாக்குகளைப் பெறமாட்டார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று பாத்தஹேவாஹெட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேவையெனின் உள்ளுராட்சி மன்ற ஆட்சியை தாமரை மொட்டிலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ கைப்பற்றட்டும் ஆனால் அதில் முடிவுகளை எடுப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“எங்களது ஆட்சி இன்னும் 3 வருடங்களுக்கு இருக்கும். அதேப்போல் ஜனாதிபதியும் 3 வருடங்களுக்கு ஆட்சியில் இருப்பார், நான் நினைக்கவில்லை உள்ளுராட்சித் தேர்தலில் அடுத்த சுற்றுக்கு செல்ல எமக்கு பிரச்சனைகள் இருக்குமென்று. எது எப்படியோ இலங்கையிலுள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முடிவுகளுக்கு அமையவே அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.(ச)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>