இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத போதைப் பொருள் நிகவரெட்டியவில் மீட்பு


646476663jal

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத போதைப் பொருள் என கூறப்படும், ஜெல் வகையான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நிகவரெட்டிய பகுதியில் வைத்து பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் இதனைக் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விஷேட பரிசோதனைகளுக்காக நகரில் இருந்த போது, கைகளால் எழுதப்பட்ட இலக்கத் தகடினை உடைய வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.

அதில், ஜெல் வகை போதைப் பொருள் மற்றும் அதனை பயன்படுத்தத் தேவையான உபகரணமும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒருவர் என்பதோடு, குறித்த வாகனம் வாடகைக்கு பெறப்பட்ட ஒன்று எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(ச)

6 comments

  1. ஷீஷா……. இதன் பெயர்…… அதுதானே??????

  2. ஷீஷா……. இதன் பெயர்…… அதுதானே??????

  3. This not most dengures

  4. This is not drugs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>