உலக நன்மைக்காக பாம்புகளுக்கு திருமணம்


download (1)

உலக நன்மைக்காக ஆந்திராவில் பாம்புகளுக்கு திருமணம் செய்து வைத்த விநோத சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பார்வதிபுரத்தில் சர்வமங்கள தேவி பீடம் உள்ளது. இங்கு உலக நன்மைக்காக பாம்புகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, நாக பாம்புக்கும், சாரை பாம்புக்கும் பாம்பாட்டியின் மூலம் மஞ்சள், குங்குமிட்டு, மலர் தூவி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, பீடத்தின் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பொதுமக்கள் துன்பங்களில் இருந்து விடுபடவும், உலக நன்மைக்காகவும் சாரை பாம்புக்கும், நாகப்பாம்புக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதேபோல், கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ஒடிசாவிலும், 40 ஆண்டுக்கு முன்பு தமிழகத்திலும் பாம்புகளுக்கு திருமணம் செய்யப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது’’.பாம்புகளுக்கு திருமணம் நடக்க இருந்த சம்பவம் குறித்து அறிந்து ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் பாம்புகளுக்கு நடந்த திருமணத்தை கண்டுகளித்தனர். (ஸ)

download (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>