இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட் அணி உலகக்கிண்ண போட்டியில் பங்கேற்க டுபாய் பயணம் (Video)


Screen Shot 2018-01-04 at 2.05.37 PM

5ஆவது பார்வையற்றோர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 9ஆம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட்அணி எதிர்வரும் சனிக்கிழமை டுபாய் நோக்கி பயணிக்கவுள்ளது.

இம்முறை போட்டிகளை நடாத்தும் நாடாக பாகிஸ்தான் விளங்கினாலும், பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு லீக் மற்றும் அரையிறுதிப் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மானில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, சுமார் மூன்று வாரங்கள் நடைபெறவுள்ள இத்தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி பாகிஸ்தானில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு சந்தன தேசப்பிரிய தலைமை தாங்கவுள்ளார். அவருடன் மொத்தமாக 17 வீரர்களும் 3 அதிகாரிகளும் டுபாய் நோக்கி பயணிக்கவுள்ளனர்.

இப்போட்டித் தொடர் தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்துத் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று காலை கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது, பார்வையற்றோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பூரண அனுசரணையில் தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விமானப் பயணச்சீட்டு ஆகியன உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

அதேவேளை இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட்அணியின் உலகக்கிண்ண ஜெஸியும் இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்டது.

இலங்கை பார்வையற்றோர் கிரிக்கெட்அணி, உலக பார்வையற்றோர் கிரிக்கெட் அனித் தரப்பட்டியலில் 3ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(ஸ )

போட்டி அட்டவணை

ஜனவரி 09 – இலங்கை எதிர் அவுஸ்திரேலியா
ஜனவரி 12 – இலங்கை எதிர் பங்களாதேஷ்
ஜனவரி 13 – இலங்கை எதிர் இந்தியா
ஜனவரி 15 – இலங்கை எதிர் நேபாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>