51 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன


7fa5347ecfe5014afbb90268d0264db1_XL

யாழ்ப்பாணம் 51 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன இராணுவ சம்பிரதாயபூர்வமாக பதவியேற்றுள்ளார்.

படைத்தலைமையகத்தில் நேற்று காலை இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

பௌத்த மத ஆசிர்வாத வழிபாடுகளின் பின்பு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவிகளை பொறுப்பேற்றார்.

படைத்தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இதனை தொடர்ந்து யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.(ச)