மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி நான்கு சாதனைகளை படைத்துள்ளது – திகாம்பரம்


02

மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த மூன்று வருட காலப்பதியில் நான்கு சாதனைகளை படைத்துள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

முதலாவது தனிவீடு, இரண்டாவது காணி உரிமை வீட்டுரிமை, மூன்றாவது ஒப்பனை பத்திரம், நான்காவது பிரதேசபைகள் அதிகரிப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் ஒருவர் ஒரு வேலையினை செய்ய வேண்டும் என்றால் மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய பிரதேசங்களில் உள்ளவர் கூட கினிகத்தேனை செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், 50 வருடங்கள் ஆட்சியிலிருந்த அமைச்சர்கள் செய்ய முடியாத விடயங்களை இன்று நாங்கள் செய்து காட்டிவிட்டு தான் உங்களிடம் வாக்குகள் கேட்க வந்திருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு ஐ.தே.க. வின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை மஸ்கெலியா ரோயல் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், ஆர். இராஜாராம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பொதுச் செயலாளர் ஏ. லோறன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
தோட்டங்களை அபிவிருத்தி செய்தது போன்று நகரங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். உங்களுக்கு தெரியும் கடந்த 200 வருட காலமாக ஹட்டன் நகரில் புகையிரத நிலையத்தினால் அமைக்கப்பட்ட தகர வேலியினை அகற்ற முடியாததால் வீதி குறுகி காணப்பட்டது.

எவராலும் முடியாத விடயத்தினை நான் செய்து காட்டியிருக்கின்றேன். இன்று தகரங்கள் அகற்றி வீதி அகலமாக்கப்பட்டுள்ளது. அதே போன்று தான் மஸ்கெலியா நகரமும். ஆகவே ஐக்கிய தேசிய கட்சியினை வெற்றிப்பெற செய்வதன் மூலம் சகல உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும். பலர் வந்து சொல்வார்கள் நாங்கள் கடந்த வருடம் ஏமாந்து விட்டோம். இனிமேல் ஏமாறப்போவதில்லை . ஆகவே எங்களுக்கு வாக்களியங்கள் என்று அதனை நம்பாதீர்கள் நாங்கள் அமைச்சர் பதவியை வாங்கி கொண்டு வாகனங்களில் சுற்றித்திரியவில்லை.

சில தலைவர்கள் மக்களுக்கு சேவையாற்றி இருக்கின்றோம் என்று சொல்கிறார்கள். நாங்கள் தான் வாக்குரிமை வாங்கி கொடுத்தோம் என்கிறார்கள். அன்று நான் அமைச்சுப்பதவியிலிருந்திருந்தால் இதை விட மேலதிகமாக செய்து காட்டியிருப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார். (கி|ஸ)

01 02 03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>