ரணில் பதவி விலகத் தேவையில்லை- சந்திரிக்கா குமாரதுங்க


Chandrika Kumaratunga 01

ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைந்து மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும், பிரதமர் நியமனம் செய்தவர் திருடினார் என்பதற்காக பிரதமரைக் குற்றம் பிடிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பிரதமர் நியமித்தவர் திருடினார் என்பதற்கு பிரதமர் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளார் தான். அதற்காக பிரதமர் அவருடன் சேர்ந்து திருடினார் என ஆகிவிடாது. இவ்வாறிருக்கையில்,  பிரதமர் ஏன் பதவி விலக வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மஹிந்த ராஜபகஷவின் காலத்தில் இதுபோன்ற எந்தவொரு விசாரணையும் இடம்பெறவுமில்லை. குற்றவாளிகள் கண்டறியப்படவுமில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  (மு)

5 comments

 1. அது.உண்மையில்சரிதான்.பிரதமார்கலவெடுத்ததாக.யார்சொன்னாலும்மக்களும்.ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.பிரதமரைப்பற்றி.மக்களுக்குதெறியும்.மமுன்னாவ்.நாட்டின்தலைவிக்குஇது.நன்றாங.பிறிகிறது.ஆனால்மஹிந்ததேங்கிய்கல்லன்மார்களுக்குபுறியாது.அவர்கள்மஹிந்தகல்லனைவைத்துக்கொண்டுகலவானிகளையும்கொழைகாரகூட்டத்தையும்நாட்டில்ஏற்படுத்தினான்.சுனாமி.சல்லிஎங்கேமமஹிந்தவிலிங்கிவிட்டான்இதற்கு.நடவடிக்கைஎப்போதுஎடுக்க

 2. பிரதமர் களவு செய்யவில்லை என்று கூறும் அம்மை!
  ஏன் அன்று ஜனாதிபதி கூறிய ஒன்றையும் ஞாபகப்படுத்த அல்லது நினைவூட்ட மறுப்பது?
  அன்று ஜனாதிபதி கூறினார் முறி மோசடி விவகாரத்தில் யார் ஆதரவாக இயங்கியிருந்தாலும் யார் அதற்கு உடந்தையாக இருந்தாலும் அவர்களும் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என கூறினார்!
  இப்போது அமைச்சர் ரவி, பிரதமர் போன்ற முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது நிருபனமாகியுள்ளது!
  ஆனால் இங்கே அம்மையார் சென்ற அரசில் இவ்வாறு நடந்ததா நடப்பதா விசாரணை வந்ததா என தாங்கள் அணி செய்த ஊழலை மறைக்கத்திட்டம்!!
  இதுதான் நாட்டு மக்களுக்கு நீங்கள் காண்பிக்கும் நல்லாட்சியோ!!!

 3. இரண்டு பக்கமும் மாறிஅடிக்கிற ஆள்தான் சந்திரிக்கா அம்மையார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>