இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான தலைவர் இன்று அறிவிப்பு


Sri Lanka Cricket_1_0_0_0

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் இன்று (09) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்படவுள்ளார்.

தினேஷ் சந்திமால் அல்லது அன்ஜலோ மெத்திவ்ஸ் ஆகிய இருவரில் ஒருவரின் பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உடல் உபாதைக்கு உட்பட்டுள்ள அன்ஜலோ மெத்திவ்ஸ், உடற்தகைமை பரிசோதனை ஒன்றுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய அணித் தலைவரை அறிவிப்பதற்கு இன்று (09) காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு கிரிக்கெட் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>