இலங்கை ஒருநாள் அணித் தலைவராக மீண்டும் மெதிவ்ஸ்


mthwMissOpnTwo

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டீ டுவென்டி அணிகளின் தலைவராக அஞ்சலோ மெதிவ்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக சந்திப்பில் அவரின் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முத்தரப்பு போட்டிகளிலும் தலைவராக செயற்பட்ட அஞ்சலோ மெதிவ்ஸ் கடந்த வருடம் நடைபெற்ற சிம்பாபேயுடனான தொடர் தோல்வியை தொடர்ந்து அணித்தலைவர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து அவரின் இடத்திற்கு பல வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது.

இதேவேளை இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹதுருசிங்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தலைவராக செயற்பட்ட திஸர பெரேரா பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய தலைவராக அஞ்சலோ மெதிவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் தொடர்ந்தும் கடமையாற்றுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>