உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியான மாணவர்களுக்கு இலவச முழு நாள் செயலமர்வு


26231123_1585796448169201_4303801181434797474_n

இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றி அண்மையில் பெறுபேறுகள் வெளியான சகல மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்குமான கண்டி மாவட்டம் தழுவிய முழுநாள் இலவச வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றை கண்டி The Young Friends அமைப்பு ஏற்பாடு செய்தியுள்ளது.

பல்கலைக்கழக நுழைவுக்கு போதிய பெறுபேறு கிடைக்காதவர்கள் எவ்வாறு பட்டப்படிப்பை தொடர்வது, தொழில்சார் கற்கை நெறிகளை தெரிவுசெய்வது, பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்ன செய்வது போன்ற தலைப்புக்களில் இந்த முழுநாள் செயலமர்வு இடம்பெறவுள்ளது.

இச்செயலமர்வு எதிர்வரும் 28ம் திகதி பொல்கொல்லையில் அமைந்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த செயலமர்வில் கலந்துகொள்பவர்கள் இந்த இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் பதிவு செய்துகொள்ள முடியும் (Application Form – https://docs.google.com/forms/d/e/1FAIpQLSei3sCecjIuJNr0D0JLflqlK7YZOq8xOjMunsX0ShsdtkphWA/viewform)

மேலதிக தகவல்களை 0771999459 எனும் இலக்கத்தை தொடர்புகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். (நு)

26231123_1585796448169201_4303801181434797474_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>