பிணைமுறி அறிக்கை தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு – ஐ.தே.க. நடவடிக்கை


UNP

பிணைமுறி விசாரணை அறிக்கையை ஆராய மூவரடங்கிய குழுவொன்றை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளதாக செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் 30ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, அறிக்கை இன்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட அதேவேளை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பதிவிடப்பட்டது.

இந்த மூவரடங்கிய குழு குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்ந்து அதன் முடிவுகளை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழுவுக்கு சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>