FIFA உலகக்கிண்ணம் இலங்கையில் முதன்முறையாக திரைநீக்கம் (VIDEO)


FIFA trophytour

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டித்தொடரின் வெற்றிக்கிண்ணம் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

உலகம் முழுவதும் ஆறு கண்டங்களைச் சேர்ந்த 54 நாடுகளுக்கு மக்கள் பார்வைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ள வெற்றிக்கிண்ணத்தின் முதலாவது பயணமாக இலங்கைக்கு கொண்வரப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கொழுப்பு ஷங்கரிலா ஹோட்டலில் நேற்று இரவு நடைபெற்ற இந்நிகழ்வில் விளையட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இராஜதந்திரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, வெற்றிக்கிண்ணத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 1998 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்ட பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் வீரர் கிறிஸ்டியன் கரொம்பே வெற்றிக்கிண்ணத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அதனை தொடர்ந்து கிண்ணத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிண்ணத்தை திரைநீக்கம் செய்து பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கலந்துகொண்டதுடன், இலங்கை கால்பந்து கழகங்களின் அங்கத்தவர்கள், கால்பந்து ரசிகர்கள் உள்ளிட்ட 1200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு FIFA உலகக்கிண்ணத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

குறித்த கிண்ணம் இன்று மாலை மாலைதீவுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

இச்சுற்றுப்பயணத்தின் மூலம் உலகெங்கிலும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்களுக்கு FIFA உலகக்கிண்ணத்தை காண சந்தர்ப்பம் கிடைப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>