தேர்தலின் பின்னர் ஜனாதிபதியின் வாள் செயற்படுமா ?


maithri sword

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராக போட்டியிட்ட மைத்ரீபால சிரிசேன சுயமாக எந்த வேலைத்திட்டங்களும் முன்வைக்கவில்லை. மாறாக பொது அபேட்சகராக அவரை நிறுத்திய சிவில் அமைப்புகளும் கட்சிகளும் முன்வைத்த வேலைத்திட்டத்தையே அவர் மக்களுக்கு முன் சமர்ப்பித்தார். அக்காலகட்டத்தைப் பொறுத்தவரை மைத்ரீபால சிரிசேன பொது அபேட்சகராக நிறுத்தப்பட்டதும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றதும் ஒரு அசாதாரணமான நிகழ்வாகும். மைத்ரீபால சிரிசேன என்பவர் 2015ஆம் அண்டு வரை ஒரு கட்சியை வழிநடத்தியவரோ அல்லது தான் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியில் தனக்கென்று குழுக்களை அமைத்துக் கொண்டு அதிகாரத்தை அடைந்து கொள்ள முயற்சித்த ஒருவரோ இல்லை. இவ்வாறானதோர் பின்னணியில் அவர் தானே ஒரு சுயமான வேலைத்திட்டம் ஒன்றை அந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்வைக்காதது நியாயமானதாகும். குறிப்பாக அவர் சிவில் அமைப்புக்களால் முன்னிறுத்தப்பட்ட ஜனாதிபதி அபேட்சகராவார்.

அந்த சிவில் அமைப்புக்களால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டத்தையே அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். அதுவே நூறு நாள் வேலைத்திட்டமாகும். இது இதற்கு முன்னர் தேர்தல்களில் நின்ற அபேட்சகர்கள் முன்வைத்த வேலைத்திட்டத்தை விட வித்தியாசமானதாகக் காணப்பட்டது. இதில் ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்ததில் இருந்து ஒவ்வொரு நாட்களாக என்ன என்ன விடயங்கள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது தொடக்கம் அதில் குறிப்பிடப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவேற்றுவதில் ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேன கடுமையான அக்கறையுடன் செயற்பட்டார். நூறு நாள் வேலைத்திட்டத்தில் நூற்றுக்கு எண்பது வீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. இதில் குறிப்பாக பத்தொன்பதாவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி கடும் பிரயத்தானம் எடுத்தார். கூட்டு எதிரணியினரின் சில பாராளமன்ற உறுப்பினர்கள் இதனை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்கே முயற்சி செய்தனர். இது நிறைவேற்றப்பட்டால் தேசத்தின் இறுதி மூச்சும் நின்றுவிடும் என்றெல்லாம் பத்தொன்பதாவது திருத்தத்தைச் சித்தரித்தனர். பாராளமன்றத்திலே இதனை நிறைவேற்றுவதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டு எதிரணியினரின் பாராளமன்ற உறுப்பினர்களை சந்தித்து இத்திருத்ததை நிறைவேற்ற பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபரி மைத்ரீபாலசிரிசேன அவர்களை வேண்டினார். இதனால் தனக்கு காணப்பட்ட எல்லை இல்லா அதிகாரத்தைக் குறைத்துக் கொள்ள ஜனாதிபதி தானாகவே முன்வந்தார். நூறுநாள் வேலைத்திட்டத்தில் ஒரு இருபது வீதமான விடயங்கள் நிறைவேறாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு ஜனாதிபதியையே முழுப் பொறுப்பு தாரியாக்க முடியாது.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரளமன்றப் பொதுத் தேர்தல் வருகின்றது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெற்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினருடன் இணைந்து கூட்டாட்சி அமைக்கின்றது. ஐக்கய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்கின்றார். இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி முன்வைத்த வேலைத்திட்டம் அறுபது மாதங்களில் புதிய நாடொன்றை கட்டி எழுப்பும் வேலைத் திட்டமாகும். அந்தப் பொதுத் தேர்தல் முடிவடைந்து இப்பொழுது சுமார் இரண்டரை வருடங்கள் கடந்து போயுள்ளன. ஆனால் இந்த புதிய நாட்டைக் கட்டி எழுப்புவதற்கான அடிக்கல்களாவது நடப்பட்டுள்ளதா என்று அறிய முடியாதுள்ளது. இந்த இரண்டு தேர்தல்களும் முடிந்த பின்னர் நாடு ஒருவகையான விகாரத்துக்குள் சென்றது. பொருட்கள் மீண்டும் விலையேறின. பொது மக்கள் எதரிர்பார்த்த அளவுக்கு எந்த மாற்றமும் நடைபெறவில்லை. அரசாங்கம் தொடர்பாக நல்ல செய்திகள் வருவது குறைவாகவே காணப்பட்டது. அமைச்சரவையில் ஓரினத்திருமணம் தொடர்பகக் கலந்துரையாடப்பட்டது. ஆனால் அது தொடர்பாக அறுபது மாதங்களில் புதிய நாட்டை கட்டி எழுப்பும் வேலைத்திட்டத்திலோ அல்லது நூறு நாள் வேலைத்திட்டத்திலோ குறிப்பிடப்படவில்லை. மக்கள் ஓரினத் திருமணத்தை நடைமுறைப்படுத்த பொதுத் தேதர்தலில் வாக்களிக்கவில்லை. மாறாக மேற்குறிப்பிட்ட இரண்டு வேலைத்திட்டங்களிலும் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கே வாக்களித்தனர். மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் பல்வேறு தரப்புகள் மத்தியில் பலவகையாகக் கலந்துரையாடப்பட்டது. மத்திய வங்கியின் ஆளுனரின் மருமகனுக்கு மத்திய வங்கியின் பிணைமுறிகளை விற்பதாக மேற்குறிப்பிட்ட இரண்டு வேலைத்திட்டங்களிலும் குறிப்பிடப்படவில்லை. நாட்டில் இது போன்ற பல சிக்கல்கள் தோன்றின. எவன்காட் போன்ற சம்பவங்கள் அரசாங்கத்துக்கு நல்ல பெயரை ஈட்டிக் கொடுக்கவில்லை. இதற்கு எதிராக கருத்து வெளியிட்ட ரஞ்சன் ராமநாயகவின் தொகுதி அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டது.

பரமசிவனின் கழுத்தில் சுற்றி இருக்கும் பாம்புகள் இவ்விதமாக நாட்டுக்குப் பொருத்தமில்லாத ஆட்டங்களை அரங்கேற்றினர். அப்போது ஜனாதிபதி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதாக அவரை ஆட்சிக்கு கொண்டு வர உழைத்த சிவில் அமைப்புகள் உட்பட அதிகமானோர் அவருக்கு குற்றம் சுமத்தினர். அதிகமான விடயங்களில் ஜனாதிபதி மௌனம் காத்தார். அதற்கு ஜனாதிபதியையும் குறைகூற முடியாது. (இதனால் நான் அவரை நியாhயப்படுத்த எத்தனிக்கவில்லை.) தற்போதைய ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டுவர உழைத்தவர்களில் ஒரு பகுதியினர் அரசாங்கத்தின் பங்காளிகளாகக் காணப்படுகின்றனர்;. சில நேரம் தான் எதிர்பார்க்காத பதவி ஒன்றை தனக்கு அடையச் செய்தவர்களுக்கு நன்றி உடையராக இருக்க வேண்டும் என்று அவர் யோசித்திருப்பார். அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சியும் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இந்தப் பின்னணியில் அவருடைய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அவகாசங்கள் அவருக்கு குறைவாகவே காணப்பட்டது. ஆனால் அரசாங்கத்தின் ஒரு பகுதியினரால் நாடு அதளபாதளத்துக்கு சென்று கொண்டிரக்கும் போது ஜனாதிபதி அந்தளவு மௌனமாகவும் இருக்கவில்லை. நாட்டுக்குப் பொருத்தமில்லாத பல வேலைத்திட்டங்கள் முன்வைக்கபபடும் பொழுது அவர் அமைச்சரவையில் தனது அதிருப்தியை வெளியிட்டதாகக் கூறப்படுகின்றது. மத்திய வங்கி பிணைமுறி விவாகரம் அம்பலத்துக்கு வந்த போது மத்திய வங்கி ஆளுனரை பாதுகாக்க அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டனர். ஆனால் ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேன இக்குற்றச் சாட்டை காரணம் காட்டியே மத்திய வங்கி ஆளுனரை பதவி நீக்கம் செய்தார். ஆனாலும் நாட்டுக்குப் பொருத்தமில்லாத விடயங்கள் அரங்கேற்றப்படும் பொழுது ஜனாதிபதி அனைத்து விடயங்களிலும் மௌனம் காப்பதாகவே மக்களுக்கு தோன்றியது. அவர் மௌனமாக இருப்பதாகவே மக்கள் குற்றம் சுமத்தினர்.

ஆனால் இப்போதைய நிலையில் அது அவ்வாறில்லை என்று தோன்றுகிறது. பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார் என்ற பழமொழிக்கு ஏற்ப ஜனாதிபதி தனக்கான சந்தர்ப்பம் வரும் வரை பொறுத்துக் கொண்டிருந்தார் என்று விளங்குகிறது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியே வந்த பின்னர் தான் ஜனாதிபதியின் நிலமை மாற்றம் அடைந்தது. இதற்கு முன்னர் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் தமக்கு முன்னர் ஆட்சி செய்த அரசாங்கங்களின் குற்றங்களையே மூலைமுடுக்கெல்லாம் தேடினர். ஆனால் இந்த ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் குற்றத்தைத் தேடி அதை வெளிக்காட்டினார். இது தொடர்பாக தனது கருத்தை வெளியிட்ட இடதுசாரி சிந்தனையாளரான டியூகுணசேகர எஸ். டபிளியூ. ஆர். டி. பண்டார்நாயகவிற்குப் பிறகு தன்னுடைய அரசாங்கத்தின் குற்றத்தை வெளிக்காட்டி அதற்குப் பெறுப்பு வாய்ந்த அமைச்சரையும் இந்த ஜனாதிபதியே நீக்கினார் என்று குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கூட்டங்களில் ஜனாதிபதி வெளியிடும் கருத்துகள் யாரும் எதிர்பார்க்கதாகவே காணப்படுகின்றது. ஜனாதிபதி மௌனமாக இருந்தார் என்று கூறியவர்கள் இன்று மௌனமாகி இருக்கிறார்கள். ஜனாதிபதியின் கருத்துகளைப் பார்த்து அரசாங்கத்தின் சில அமைச்சர்களும் பயப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி வெளியிடும் கருத்துகள் கட்சி சார்பானவையாகவோ இனங்கள் சார்பானவையாகவோ காணப்படவில்லை. இதுவரை ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் மக்கள் அபிப்பிராயத்தை தம் பக்கம் வைத்துக் கொள்ள ஒவ்வொரு ஒவ்வொரு இடங்களில் அந்த இனத்துக்கு சார்பான கருத்துகளையே வெளியிட்டனர். இந்த ஜனாதிபதி களவு, இலஞ்சம், ஊழல் என்பவற்றுக்கு எதிரான கருத்துகளையே முன்வைக்கிறார். ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி தான் ஸ்ரீலங்கா சுததந்திரக் கட்சிக்காரருக்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்காரருக்கோ எதிரானவர் இல்லை என்றும் களவு, இலஞ்சம், ஊழல் என்பவற்றை செய்பவர்களக்கே எதிரானவர் என்றும் குறிப்பிட்டார். இவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தை பெப்ரவரி பத்தாம் திகதிக்குப் பின்னர் தீவிரப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். அதற்கு மக்களின் ஆதரவை அவர் இத்தேர்தலில் எதிர்பார்க்கிறார். இவை வெறுமனே கருத்துகள் அல்ல. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கென்று சுயமான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்காத ஜனாதிபதி இந்த உள்ளுராட்சித் தேர்தலில் தெளிவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்து இருக்கிறார். அது களவு, இலஞ்சம், ஊழல் என்பவற்றுக்கு எதிரானதாகும். அதனை நிறைவேற்றுவதற்கு அவர் இந்தத் தேர்தலின் ஊடாக மக்களின் அங்கீகாரத்தையே கோருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேலைத்திட்டங்களை வெற்றி பெற வைப்பதோ மைத்ரீபால சிரிசேனவை வெற்றி பெற வைப்பதோ மக்களின் நோக்கமாகக் காணப்படவில்லை. மாறாக இருந்த ஆட்சியை விரட்டுவதே மக்களின் நோக்கமாகக் காணப்பட்டது. அதற்குப் பொருத்தமானவராக இவரே காணப்பட்டார். ஆனால் இது வரை காலமும் சம்பிரதாயமாக வந்த வழிமுறையில் மைத்ரீபால சிரிசேன ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் முஸ்லிம்கள் மட்டுமல்ல எல்லா இனத்தைச் சேர்ந்த மக்களும் எல்லா வகுப்பினரும் பாதிக்கப்பட்டனர். குடிக்க நீர் கேட்டவர்களுக்கு குண்டுகளே வழங்கப்பட்டன.

கடந்த ஆட்சியில் காணப்பட்ட மக்கள் வெறுப்புப் பி;ன்னணியை தமக்குச் சார்பாக பயன்படுத்த முயற்சித்த கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க எத்தனித்த ஒரு பிரிவினரும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு மைத்ரீபால சிரிசேனவை பலிக்கடவாக்கினர். ஆனால் அவர்களின் நோக்கம் சிவில் அமைப்புகளின் நோக்கம் போன்று காணப்படவில்லை. எவ்வாறு பிலிமதலாவை மகா அதிகாரம் மன்னன் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனை சிம்மாசனத்தில் அமர்த்தி தனக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தானோ அது போல் அவர்கள் மைத்ரீபால சிரிசேனவன் ஊடாக தாம் அதிகாரத்துக்கு வருவதற்கு கனவு கண்டனர். அவர்களுடைய இந்த நோக்கம் பொருட்படுத்தப்படவில்லை. அவர்களின் வேலைத்திட்டங்கள் நன்றாக இருக்கும் என்று ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியும் கடந்த பாராளமன்றப் பொதுதுத் தேர்தலில் மக்களும் அந்தப் பிரிவினருக்கும் அதிகாரத்தை வழங்கினர். ஆனால் அவர்கள் பொதுத் தேர்தலுக்கு முன்வைத்த வேலைத்திட்டங்களை மறந்து இலங்கையின் கலாசாரம், பொருளாதாரம் போன்றவற்றுக்குப் பொருத்தமில்லாத திட்டங்களையே அவர்கள் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு கடந்தகால ஊடக அறிக்கைகள் சான்றுபகர்கின்றன. இது வரை காலமும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தின் அந்தப் பிரிவினருக்கும் இடையிலான உறவு நகமும் சதையும் போல இருந்தது போல் தோன்றியது. ஆனால் அது ஓடும் புளியம் பழமம் போல் இருந்துள்ளது என்று இப்போது தெளிவாகின்றது. இதனை ஜனாதிபதியின் உரைகளே உறுதிப்படுத்துகின்றன. தான் இந்த அரசாங்கத்தில் இல்லாதிருந்தால் அரசாங்கம் படுமோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என்று ஜனாதிபதி அண்மையில் ஒரு கூட்டத்தில் கவலையுடன் கருத்து வெளியிட்டார். அரசாங்கத்தின் இந்தப் பிரிவினர் மீது மக்களும் விரக்தியுடன் இருக்கின்றனர்.

இந்த நாட்டில் பிரபுத்துவ அந்தஸ்தில் இருக்கும் கள்வர்களின் கூட்டம் ஒன்று இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றனர். இக்கருத்தை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரின் உரைகளும் உறுதிப்படுத்துகின்றது. இந்த நாட்டில் ஆட்சிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரின் உரைகளை ஆய்வு செய்வதன் மூலம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். ஜனாதிபதி இந்த பிரபுத்துவ அந்தஸ்தில் இருக்கும் கள்வர்களை விரட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்களின் ஆணையைத் தனக்குத் தருமாறு மக்களிடம் வேண்டுகிறார். இக்கள்வர்கள் அரசாங்கத்திலும் இருக்கின்றனர். பாராளமன்றத்திலும் இருக்கின்றனர். இன்னும் பல ஆட்சி மன்றங்களிலும் இருக்கின்றனர். ஜனாதிபதியின் வேலைத்திட்டம் தற்போதைய கால கட்டத்தில் சாலப் பொருத்தமாகக் காணப்படுகின்றது. யுத்தத்துக்குப் பின்னரான நாட்டின் அபிருத்தியை முன்னெடுக்க முதலாவது செய்ய வேண்டியதும் இதுவாகும். அப்பொழுது தான் அப்பழுக்கற்ற அபிவிருத்தியை மேற்கொள்ளலாம். கிறிஸ்தவ சமயப் பாதிரிமார் சீர்கெட்டுப் போயிருந்த காலகட்டத்தில் அவர்களை விரட்டி கிறிஸ்துவ சமயத்தை தூய்மைப்படுத்த புரட்டஸ்தாந்து சமயத்தின் ஸ்தாபகரான மார்டின் லாதர்கிங் ஆற்றிய பணியைப் போல் ஒரு வேலையை செய்யவே ஜனாதிபதி மக்களின் ஆணையை தன்பால் கேட்கின்றார். இந்த வேண்டுகோளை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் மீது விரக்தி அடைந்து போயிருந்த சிவில் அமைப்புக்களுக்கு இப்பொழுது ஜனாதிபதியின் மீது நல்லபிப்பிராயம் உருவாகி இருக்கின்றது.

அண்மையில் கூட்டமொன்றில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி பகவத் கீதையின் கூற்றொன்றை மேற்கோள் காட்டி இருந்தார். அது மகாபாரத யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அர்ச்சுனன் கூறிய கூற்றாகும். அதாவது மகாபாரத யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் தன்னுடைய வாளால் அதர்மிகள் அழிவார்கள் என்றும் அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலம் தன்னுடைய வாளுக்கு இரையாகுவார்கள் என்றும் அர்ச்சுனன் குறிப்பிட்டான். அது போல் களவு, இலஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக தான் ஏந்தியுள்ள வாளுக்கு களவு, இலஞ்சம், ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் இரையாகுவார்கள் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அதில் தன்னுடைய கட்சி தன்னுடைய குடும்பம் தன்னுடைய அரசாங்கம் என்று கருத்தில் கொள்ளப்படாது என்று குறிப்பிட்டார்.

ஆனால் கவலையான விடயம் என்னவெனில் அர்ச்சுனனின் வளைப் போல் ஜனாதிபதியின் வாள் கூர்மையானதாகக் காணப்படவில்லை. ஜனநாயக ஆட்சி முறையில் அந்த வளைக் கூர்மையாக்கிக் கொடுக்கும் பணி பொது மக்களின் கையிலே இருக்கின்றது. அதற்கு பொது மக்களுக்கு விதி வழங்கிய சந்தர்ப்பமே எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலாகும். பல தடைகளைத் தாண்டியே இந்தத் தேர்தல் வந்தது. ஜனாதிபதியின் வாளை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூர்மையாக்கிக் கொடுக்க பொது மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மகாபாரதப் போரில் அதர்மீகளான கௌரவர்களை அழிப்பதற்கு அர்ச்சுனன் உட்பட பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் உதவி செய்தார். சகுனியின் பல சதித் திட்டங்களில் இருந்து பாண்டவர்களை கிருஷ்ணர் பாதுகாத்தார். யுத்தத்தின் போது கர்ணனின் நாக அஸ்திரம் அர்ச்சுனன் மீதே பாய்ந்தது. ஆனால் கிருஷ்ணர் தேரை மண்ணில் புதைத்து அர்ச்சுனனைக் காப்பாற்றினார். ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் தெளிவாக இருக்கும் பட்சத்தில் கிருஷ்ணர் ஆற்றிய பணியை இந்த நாட்டில் உள்ள சிவில் அமைப்புகள் ஆற்ற வேண்டி இருக்கின்றது.

இங்கே கிருஷ்ணரின் பாத்திரத்தை அரசியல் கட்சிகள் ஆற்றும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் இந்த பிரபுத்துவ அந்தஸ்பை; பெற்ற திருடர்கள் இந்த அரசியல் கட்சிகளிலே அதிகமாக இருக்கின்றனர். ஜனாதிபதியின் வாள் அவர்களுக்கு எதிரானதாகும். அவர்கள் இந்த ஜனாதிபதியை விரட்ட துரியோதனின் பாத்திரத்தையே ஆற்றுவர். பாண்டவர்களை அழிக்க துரியோதனன் எடுத்த முயற்சிகளை விட இவர்கள் இந்த ஜனாதிபதியை விரட்ட முயற்சி எடுப்பர்.

ஜனாதிபதியின் எண்ணம் உண்மையாயின் கிருஷ்ணரின் பணியை ஆற்ற இந்த நாட்டின் எதிர்காலதின் மீது அக்கறை கொண்ட சிவில் அமைப்புகள் முன்வர வேண்டும். அப்போது மகாபாரதப் போரில் அதர்மிகளை அழித்து தர்மத்தை ஸ்தாபனம் செய்வதற்கு கிருஷ்ணருக்கு எவ்வாறு முடிந்ததோ அது போல் களவு, இலஞ்சம், ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கி புதியதொரு அரசியல் கலாசாரத்தை இந்நாட்டில் தோற்றுவிக்க சிவில் அமைப்புகளுக்கு முடியும். (நு)

– பிதாமகர் பீஷ்மர் –

7 comments

  1. இல்லை

  2. Mohamed Rimzan Maharoof

    No Never yendal andha vaal thuru pudichi romba naal agirichi adhu vengayam vettawum udhawadhu

  3. Mohamed Rimzan Maharoof

    No Never yendal andha vaal thuru pudichi romba naal agirichi adhu vengayam vettawum udhawadhu

  4. மைத்திரி பல சொரிசேநாய்

  5. மைத்திரி பல சொரிசேநாய்

  6. Muth hora uth horra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>