உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி மீட்பு (Photos)


DSC02128

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அண்மித்த பகுதியில் ஹட்டன் லெதண்டி தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று காலை சிறுத்தைக்குட்டி ஒன்று இருப்பதைக் கண்ட பிரதேச மக்கள் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர். இதன் பின்னர், சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுத்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். (ஸ)

DSC02128 DSC02134

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>