பாராளுமன்றில் தொடர்ச்சியாக 8 மணிநேரம் உரையாற்றி சாதனை படைத்த எம்.பி


170624-reid-nancy-pelosi-hero_h2tlor

அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில், ஜனநாயகக் கட்சி எம்.பி.யான நான்சி பெலோசி, 8 மணி நேரம் 7 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக உரையாற்றி சாதனை படைத்துள்ளார்.

பிரதிநிதிகள் சபையின் முன்னாள் தலைவரும், பிரதிநிதிகள் சபையின் தற்போதைய ஜனநாயகக் கட்சி தலைவருமான நான்சி பெலோசிக்கு தற்பொழுது 77 வயதாகிறது.

புதன்கிழமை காலை 10 மணியளவில் உரையாற்றத் தொடங்கிய அவர், மாலை 6.11 மணிக்கு தனது உரையை முடித்துள்ளார்.

முறையான ஆவணங்கள் இன்றி மிகச்சிறு வயதில் குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தியே நான்சி பெலோசி, இந்த நீண்ட உரையை ஆற்றியுள்ளார்.

இதற்கு முன்னர், அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 1909ஆம் ஆண்டு சாம்ப் கிளார்க் என்ற எம்.பி., தொடர்ச்சியாக 5 மணி நேரம் 15 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார். அதன் பிறகு 108 ஆண்டுகள் கழித்து மிக நீண்ட உரையாற்றியவர் என்ற பெருமையை நான்சி பெலோசி பெற்றுள்ளார். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>