ஊழல் வழக்கில் கலிதா ஸியாவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை


Screen Shot 2018-02-08 at 4.22.57 PM

அறக்கட்டளைக்கு முறைகேடாக நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியான பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஸியாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஸியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல இலட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடை பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கலிதா ஸியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்காவில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கலிதா ஸியா சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. என்றாலும் கலிதா ஸியாவின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.

இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஸியா அனாதை இல்ல அறக்கட்டளைக்கு முறைகேடாக 2.5 லட்சம்டொலர்களை நன்கொடை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, கலிதா ஸியா (வயது 72) மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கலிதா ஸியாவின் மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை அடுத்து அங்கு அமைதியின்மை நிலவுவதால் டாக்காவின் அனைத்து பகுதிகளிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>